ARTICLE AD BOX
ஹைதராபாத்தில் உள்ள புஷ்பா 2 பட இயக்குநர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் புஷ்பா 2. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த நிலையில் விரைவில் ரூ.2000 கோடி வசூல் வேட்டையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இயக்குநர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலையில் தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்துள்ளது. மேலும், சுகுமார் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்த போது அழைத்துச் சென்ற பிறகு அவரது வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. எனினும் எதற்காக இந்த சோதனை என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
உதயநிதி திருமணத்தில் சமையல் வேலை செய்த தேசிய விருது நடிகர்! யார் தெரியுமா?
இதே போன்று தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை, நிதி முறைகேடுகள் மற்றும் அறிவிக்கப்படாத பணம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய வரி ஏய்ப்பைக் கண்டறிய அதிகாரிகள் நிதித் தரவுகள் மற்றும் பரிவர்த்தனைகளை மறு ஆய்வு செய்கின்றனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ளார் தில் ராஜூ. ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். ராஜு இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். புஷ்பா 2 இயக்குனர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஜெயிலர் 2' படத்தில் சிவராஜ் குமாருக்கு பதிலாக இந்த மாஸ் நடிகரா? வெளியான புது தகவல்!