ARTICLE AD BOX
புரிஞ்சிக்க மச்சான்.. உனக்கு ஒர்க் டென்சன்.. எனக்கு ஒர்க்கே இல்லனு டென்சன்!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை இரவே, திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற கவலை நம் நெட்டிசன்களுக்கு வந்து விடுகிறது போலும். அது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே நன்கு தெரிகிறது.
முன்பெல்லாம் பள்ளிக் குழந்தைகள்தான், சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என அழுவார்கள். அதுவும் ஞாயிறு மாலையே அவர்களுக்கு திங்கட்கிழமை பயம் வந்து விடும். இன்னமும் ஹோம் ஒர்க் செய்யவில்லையே, அடுத்த நாள் டெஸ்ட்டுக்கு படிக்கவில்லையே என அவர்கள் கவலைப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கும்.

ஆனால், இப்போதெல்லாம் அந்தக் குழந்தைகளின் மனநிலையையே தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிற்கு, திங்கட்கிழமையை நினைத்து கவலைப்பட ஆரம்பித்து விட்டனர் வேலைக்குச் செல்பவர்கள். அதனாலேயே ஞாயிறு விடுமுறையைக்கூட மகிழ்ச்சியாகக் கழிக்காமல், திங்கட்கிழமையை நினைத்து கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். இது அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரும் மீம்ஸ்களின் எதிரொலிக்கிறது.
"சொன்னா கேளு.. திங்கட்கிழமை ரொம்ப சுறுசுறுப்பா இருக்காத.. எல்லா வேலையையும் உன் தலைல கட்டிடுவாங்க!" என்றும், "புரிஞ்சிக்க மச்சான்.. உனக்கு ஒர்க் டென்சன்.. எனக்கு ஒர்க்கே இல்லனு டென்சன்.. ரெண்டும் ஒண்ணு இல்ல.. வேற வேற!" என்றும் ஞாயிறு இரவே மீம்ஸ்களில் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- கதறும் வால் ஸ்ட்ரீட்! அமெரிக்காவே நடுங்குது! அடுத்து இந்தியா, இங்கிலாந்துதான்! டிரம்ப்பால் வந்த வினை
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் நடக்க போகுது.. உஷார்.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
- பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- நேரடியாக வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000 + ரூ.7000.. பட்ஜெட்டில் தங்கம் அறிவிப்பு.. யாருக்கு பலன்?
- பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ரயில்வே.. வைகை, பல்லவன் எக்ஸ்பிரசில் வந்த மாற்றம்
- பழைய ஓய்வூதிய திட்டம் எங்கே? பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?
- ஆதார் அட்டை வைத்துள்ளோருக்கு அறிவிப்பு.. ஆதார் புதிய பதிவிற்கு விலக்கு! வேலூரில் 7 மையங்களில் அதிரடி
- சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்