புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

2 hours ago
ARTICLE AD BOX

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.

தஞ்சாவூரை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் அம்மன் புற்றாக உருவெடுத்து அருள்பாலித்து வருகிறார். இதன் காரணமாக மூலவரான அம்மனுக்கு எந்தவிதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்திற்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவங்கியது.

இதனையொட்டி, உறுமி மேளம், கொம்பு இசை, தப்பாட்டம், கோலாட்டம், காளியாட்டத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைபாரி எடுத்து ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். 7ம் தேதி மாலை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை துவங்குகிறது.

Read Entire Article