ARTICLE AD BOX
நாடு முழுவதும் மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய மின்துறை அமைச்சம் ரேங்கினைவெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரி மின் துறை 'ஏ' கிரேடு அந்தஸ்தினை பெற்றுள்ளது.
நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின் கடந்த 2023 -24ம் நிதியாண்டில் செயல் திறன் தொடர்பாக, அவற்றின் நிதி நிலைமை, மின் கட்டணம் வசூல், மின் வினியோக செயல்பாட்டை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை, மத்திய மின்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், 52 அரசு மற்றும் தனியார் மின் வினியோக நிறுவனங்கள் 11 மின் துறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, 'ஏ பிளஸ், ஏ, பி, பி மைனஸ், சி, சி மைனஸ்' போன்ற கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் புதுச்சேரி அரசின் மின் துறை 67.1 மதிப்பெண்ணுடன் ஏ கிரேடினை பெற்று அசத்தியுள்ளது. கடந்த 12-வது தரவரிசை பட்டியலில் 60.2 மதிப்பெண்ணுடன் பி கிரேட்டில் இருந்த புதுச்சேரி அரசின் மின் துறை இப்போது வெளியிடப்பட்டுள்ள 13-வது தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.