ARTICLE AD BOX
தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை ஊராட்சியில் இயங்கி வரும் கால்ஸ் என்ற பெயரிலான தனியார் மதுபான ஆலையில் இன்று காலை 11 மணியளவில் இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலை உள்ளே சென்று மதுபான இருப்பு விவரம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதனால், இந்த ஆலையில் பணி முடிந்து செல்லும் தொழிலாளர்கள் காலதாமதமாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தனர். மேலும், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட மதுபானப் பெட்டிகள் வெளியில் வர அனுமதிக்கவில்லை என்றும் வெளியே இருந்து உள்ளே வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை எனவும் சொல்லபப்டுகிறது. இந்த திடீர் சோதனையால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.