ARTICLE AD BOX

பிக் பாஸ் சீசன் 8ன் வெற்றியாளரான முத்துகுமரனுக்கு பிக் பாஸ் வீட்டில் அதிகமான கேப்டன்ஷிப் பதவியை பெற்றதற்க்காக ராயல் என்ஃபில்ட் பைக்கை பரிசாக அறிவித்திருந்தனர். முத்துகுமரன் அந்த பைக்கை தன் தந்தைக்கு சர்ப்ரைசாக கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
முத்துகுமரன் சிறு வயதிலிருந்து பல புத்தகங்களை வாசித்து தன் பேச்சு திறமையை வளர்த்துக்கொண்டார். தனது பேச்சு திறமையால் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைத்தது. அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அந்த மேடை தான் அவருக்கு பிக்பாஸில் பங்குபெருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8ல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட முத்துகுமரன் தன் பண்பான பேச்சுத் திறமையாளும், அன்பான குணத்தாலும் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கவர்ந்து அப்போட்டியில் வெற்றிப்பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான கேப்டன்ஷிப்பை வென்றவர்களுக்கு ராயல் என்ஃபில்ட் வழங்குவதாக அறிவித்தபடி அவர் இன்று அதை வாங்கிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் வி.ஜே. வசந்த் ஏன் உங்களுக்கு இந்த பைக் மேல இவ்வளவு க்ரேஸ் என கேட்டதற்கு முத்து பல்ஸர்ல போறது குதிரைல போகிற மாதிரி ஆன என்ஃபில்ட் புல்லட்டுல போறது சிங்கத்துல போகிற மாதிரி என்றார்.
முத்துகுமரன் மற்றும் அவரது இரு நண்பர்களுக்கும் மிலிட்ரிக்கு போக வேண்டும் என்றும் புல்லட் வண்டி வாங்கி ஓட்ட வேண்டும் என்றும் ஆசை இருந்ததாக கூறியுள்ளார். தனது நண்பர்களில் ஒருவரை அந்த வண்டியை திறந்து வைக்க செய்து மகிழ்ந்தார். பின்பு சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வண்டியை கொண்டுவந்து தன் அப்பாவுக்கு சர்ப்பரைஸ் கொடுத்தார். முத்துகுமரனின் அப்பா என் பிள்ளையின் பல நாள் கனவு நிறைவேறியது அவனின் கடினமான உழைப்பாலும் முயர்ச்சியாலும் கிடைத்தது அதற்கான வாய்ப்பை அளித்த விஜய் டிவிக்கும் பிக் பாஸ் டீமிற்க்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
முத்துகுமரன் பிக்பாஸ் வீட்டில் தனது முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றி மற்றும் உங்கள் சார்பில் என் அப்பாவிற்கு நான் என்ஃபில்ட் புல்லட் வாங்கி கொடுத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.