ARTICLE AD BOX
புது UPI ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. Google Pay, PhonePe-இல் இந்த மொபைல் நம்பர் இருக்கா.. பேங்க் நீக்க போகுது!
பேங்க் அக்கவுண்ட்கள் (Bank Accounts) மட்டுமல்லாமல், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் (Payment Service Providers) ஆப்களில் கொடுத்த மொபைல் நம்பர்கள் நீக்கப்பட இருக்கின்றன. இதுபோன்ற மொபைல் நம்பர்களை பேங்க் அக்கவுண்ட் அல்லது யுபிஐ ஆப்களில் கொடுத்திருந்தால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அந்த நம்பர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கும். இந்த புதிய யுபிஐ விதிகளால் (New UPI Rules) இனிமேல் என்னென்ன மாற இருக்கிறது?
பேங்க் மூலம் பணம் அனுப்பினாலும் சரி, யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பினாலும் சரி, அதற்கு மொபைல் நம்பர்கள் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டன. உங்களிடம் இருக்கும் மொபைல் நம்பர் மட்டுமே பேமெண்ட் சர்வீஸ் அடையாளமாக இருக்கிறது. ஆகவே, அந்த மொபைல் நம்பர்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.

பேங்குகள் அல்லது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் பல மொபைல் நம்பர்களை கொடுத்து கஸ்டமர்கள் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இவற்றில் சிலர் மொபைல் நம்பர்களை பல மாதங்களாக பயன்படுத்தாமல் இருந்துவிட்டால், சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது, பயன்படுத்தாமல் இருக்கும் மொபைல் நம்பர்கள் நீக்கப்பட இருக்கின்றன.
என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது செயலற்ற (Inactive) அல்லது மறுசுழற்சி மொபைல் நம்பர்களை (Recycled Mobile Numbers) நீக்குமாறு பேங்குகள் மற்றும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க சொல்லி இருக்கிறது.
அதே நேரத்தில் நீக்கப்பட்ட மொபைல் நம்பர்கள் அடங்கிய பட்டியலை வாராந்திர முறையில் புதுபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு மேல் செயலற்ற அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட மொபைல் நம்பர்கள் பேங்க் அக்கவுண்ட்கள் மற்றும் யுபிஐ ஆப்களில் இருந்து நீக்கப்பட இருக்கின்றன. இதனால், அந்த நம்பரை திரும்ப பயன்படுத்த முடியாமல் போகலாம்.
செயலற்ற அல்லது மறுசுழற்சி மொபைல் நம்பர்கள் என்றால் என்ன? சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இதுவொன்றும் புதியது கிடையாது. அதாவது, உங்களிடம் இருக்கும் மொபைல் நம்பர் மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் அல்லது டேட்டா போன்ற எந்தவொரு சேவைகளையும் பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலிழக்க செய்யப்படும். அது புதிய சந்தாதாரருக்கு ஒதுக்கப்படும்.
இதுபோன்ற நம்பர்களை பேங்குகள் அல்லது யுபிஐ ஆப்களில் கொடுத்து இருந்தால், அந்த நம்பர் மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்யும்போது சிக்கல் ஏற்படும். பல்வேறு கஸ்டமர்களின் மொபைல் நம்பர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் வேறு கஸ்டமர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நம்பரை நீக்க கோரி பேங்குகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டி இருந்தது.
ஆனால், இந்த புதிய விதிகள் மூலம் உங்களது நம்பர் செயலிழந்து போனாலோ அல்லது வேறு கஸ்டமர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்டாலோ நேரடியாக பேங்குகள் அல்லது யுபிஐ ஆப்கள் மூலம் நீக்கப்பட்டுவிடும். இதனால், மொபைல் நம்பரில் ஏற்படும் குழப்பம் மற்றும் சிக்கல் குறைக்கப்பட இருக்கிறது. ஆனால், உங்களுக்கு அதே நம்பர் வேண்டும் என்றால், உடனடியாக இதை செய்யுங்கள்.
உங்களது செயலற்ற மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்து ஆக்டிவ் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த நம்பர் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, 90 நாட்களாக சிம் கார்டில் எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள், டேட்டாவை பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் அந்த நம்பருக்கு குறிப்பிட்ட ரீசார்ஜ் செய்து தக்க வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால்.