புதிய தொடரில் ரேஷ்மாவுடன் இணையும் சுந்தரி சீரியல் நடிகர்!

14 hours ago
ARTICLE AD BOX

புதிய தொடரொன்றில் நடிகை ரேஷ்மா முரளிதரன் மற்றும் சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். இவர், தற்போது ரோஜா - 2 தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய தொடர் ஒன்றில் நடிகர் ஜிஷ்ணு மேனன், ரேஷ்மா முரளிதரன் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் பிரபல தொடர்! சோகத்தில் ரசிகர்கள்!

தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா, தொடர்ந்து பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

மிஸ் மெட்ராஸ் 2016-ல் இரண்டாம் இடம் பிடித்து, சின்ன திரையில் நுழைந்த இவரை, இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஜிஷ்ணு மேனம் இணைந்து நடிக்கும் புதிய தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்தொடரின் முன்னோட்ட விடியோ, ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article