புதிய சீரியலில் கமிட் ஆன பாக்யா: முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி? ப்ரமோ வைரல்!

3 days ago
ARTICLE AD BOX

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக கூறப்படும் நிலையில், கதை தற்போது வேறொரு களத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனிடையே இந்த சீரியலில் பாக்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கே.எஸ்.சுசித்ரா, சன் நெட்வொர்க்கின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கோபி, பாக்யா, ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டி வருகிறது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், பழைய கதையையே மீண்டும் படமாக்கியது தான். பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டு, அதை கெடுக்கவே சதி செய்துகொண்டிருந்தார். இதனால் சீரியலின் சமீபத்திய எபிசோடுகள், பரபரப்பை ஏற்படுத்த தவறிவிட்டது. மேலும் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி கேரக்டர் இறந்த உடனே பாக்கியலட்சுமி முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.

அதே சமயம் தற்போதுவரை, பாக்கியலட்சுமி சீரியல், ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் சீரியல் எப்போது முடியும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில், பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கே.எஸ்.சுசித்ரா, உதயா (சன் கன்னடா) டிவியில் ஒளிபரப்பாக உள்ள கன்னட சீரியலான சிந்து பைரவி சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.

Advertisment
Advertisement

இந்த சீரியல் தொடர்பான ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியள்ளது. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் சீரியலின் கன்னட ரீமேக்கான இந்த சீரியலில், சுசித்ரா கமிட் ஆகியுள்ளதால், பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Read Entire Article