புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பார்மா பங்குகள் சரிவுடன் முடிவு!

4 days ago
ARTICLE AD BOX

புதுதில்லி: அமெரிக்காவின் புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பல பார்மா பங்குகள் இன்று சரிவுடன் முடிவடைந்தது.

டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 2.63 சதவிகிதமும், ஜைடஸ் லைஃப் சயின்சஸ் 2.47 சதவிகிதமும், அரபிந்தோ பார்மா 2.41 சதவிகிதமும், லூபின் 1.75 சதவிகிதமும், சன் பார்மா 1.46 சதவிகிதமும், சிப்லா 1.21 சதவிகிதமும், கிளென்மார்க் பார்மா 0.71 சதவிகிதமும், சரிந்து முடிந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 25 முதல் வாகனம், குறைக்கடத்தி மற்றும் மருந்து இறக்குமதிக்கு 25 சதவிகித கட்டணங்களை விதிக்கும் திட்டத்தை அறிவித்தார். இது சர்வதேச வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிக்கும் நேரத்தில் உலகளாவிய சந்தை உணர்வுகளைக் வெகுவாக குறைத்தது.

நிஃப்டி பார்மா குறியீட்டை பாதித்த நிலையில், பல ஏற்றுமதி சார்ந்த மருந்து நிறுவனங்களின் பங்குகள் விற்பனை 0.7 சதவீதம் சரிந்தது முடிந்தது.

இதையும் படிக்க: 9 அதானி குழும பங்குகள் சரிவுடன் முடிவு!

Read Entire Article