புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யணும்... போர்க் கொடி தூக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பு

1 day ago
ARTICLE AD BOX

தஞ்சாவூர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி தணிக்கை பணி மன்ற மாநில தலைவர் அம்பேத்கர், தமிழக ஆசிரியர் கூட்டணி உயர்மட்ட குழு உறுப்பினர்கள் எழிலரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதை களைய வேண்டும்.

தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நிறைவுறையாற்றினார். இதில் 500க்கும் அதிகமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர். ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் மதியழகன் நன்றி கூறினார்.

ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், . ஜாக்டோ ஜியோ சார்பில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்ட செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் பாலசுப்பிரமணியன், பூபதி, சித்தானந்தன், பன்னீர்செல்வம், ராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article