ARTICLE AD BOX
பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. இதுதான் சரியான நேரம்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung போன்..
பிளிப்கார்ட் (flipkart) சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (Dimensity 6100+ Chipset) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்தது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல். மேலும் இந்த போனில் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனின் முன்பக்கத்தில் 13எம்பி செல்பி கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years)மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
6000mAh பேட்டரியை பேக் செய்கிறது இந்த சாம்சங் போன். எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்
குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனின்ல உள்ளது. பின்பு இந்த போனின் எடை 217 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.