ARTICLE AD BOX
பிரேம்ஜிக்கு பிறந்தநாள்.. அவரது மனைவி இந்து என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. செம கொண்டாட்டம்
சென்னை: வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் கடந்த வருடத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் எளிய முறையில் நடைபெற்றது.முரட்டு சிங்கிள் என்று சொல்லி சுற்றிக்கொண்டிருந்த பிரேம்ஜிக்கு திருமணமா என்று பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். இந்தச் சூழலில் பிரேம்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்து பகிர்ந்திருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
இளையராஜாவும், அவரது சகோதரர் கங்கை அமரனும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். கங்கை அமரனின் மகன்களில் வெங்கட் பிரபு லண்டனில் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து நடிக்க ஆரம்பித்தார். ஜி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இப்போது கோலிவுட்டில் ஃபேமஸான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் விஜய்யை வைத்து GOAT திரைப்படத்தை இயக்கினார்.

வெங்கட் பிரபுவின் தம்பி: அதேபோல் பிரேம்ஜியும் லண்டனுக்கு சென்று படித்துவிட்டு வந்து யுவன் ஷங்கர் ராஜாவிடம் வேலை செய்துகொண்டிருந்தார். பின்னணி பாடகராக இருந்த அவர், சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் பார்ட்டி படத்துக்குக்கூட பிரேம்ஜி அமரன்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
என் மகனுக்கு ஹிந்தி பிடிக்காது.. நஹி அம்மானு சொல்வான்.. ஜோதிகா இப்படியும் சொல்லிருக்காங்களா?
சிங்கிளான பிரேம்ஜி: பிரேம்ஜி அமரனுக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டால், 'நான் ஒரு முரட்டு சிங்கிள்' என்றே கூறிவந்தார். அதுமட்டுமின்றி தான் அணிந்துவந்த டி ஷர்ட்டுகளிலும் முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். மேலும் படு ஜாலியான ஆள் பிரேம்ஜி. அவரிடம் திருமணம் பற்றி கேட்டாலே நைஸாக நழுவிக்கொண்டிருந்தார்.
சிங்கிள் டூ மிங்கிள்: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் என்று வெங்கட் பிரபு அறிவித்தார். கோலிவுட்டில் பெரிய தலைக்கட்டு குடும்பம் என்பதால் பிரேம்ஜியின் திருமணம் தடல்புடலாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இதிலும் ட்விஸ்ட்டாக திருத்தணி முருகன் கோயிலில் சிம்ப்பிளாக கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் பிரேம். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தின் மூலம் பழக்கமாகியிருக்கிறார்கள்.
தனுஷ் மீதுதான் மக்களுக்கு கோபமாம்.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.. என்ன இப்படி பேசிட்டாரு?
ஜாலியான வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு பிரேம்ஜியும், இந்துவும் ஜாலியாக வாழ்ந்துவருகிறார்கள். பிரேம்ஜியின் மாமியாரும் தனது மருமகன் பெயரில் ஒரு தொழிலையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் இந்து ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதாவது பிரேம்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டும் வீடியோதான் அது. அதில் காதலோடு பிரேமை இந்து கட்டி அணைத்துக்கொள்கிறார். பிறகு தனது மனைவிக்கு பிரேம்ஜி ஆசையோடு கேக்கை ஊட்டிவிடுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியே இரண்டு பேரும் காலம் முழுவதும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.