பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து!

2 days ago
ARTICLE AD BOX

பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து, சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக 40 பயணிகள் உயிர்தப்பினர்.

தமிழக - கேரளா எல்லைப் பகுதியான கோவை வேலந்தாவளம் பகுதிக்கு கோவை உக்கடம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(பிப். 23) காலை வேலந்தாவளம் பகுதியில் இருந்து கோவை, உக்கடம் நோக்கி வந்த வழித்தடம் என் 48 என்ற அரசுப் பேருந்து, சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

இதையும் படிக்க: திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

அந்தப் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குனியமுத்தூர் காவல் துறையினர், அந்தப் பேருந்தில் இருந்த பயணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article