பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

4 days ago
ARTICLE AD BOX

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கேரளம், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் புதன்கிழமை, ஆதித்யா சர்வதே 11, எம்.டி.நதீஷ் 5, நெடுமாங்குழி பாசில் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கேரளத்தின் இன்னிங்ஸ் 187 ஓவர்களில் 457 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

முகமது அஸôருதீன் 20 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 177 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் அர்ஸôன் நாக்வஸ்வல்லா 3, சிந்தன் கஜா 2, பிரியஜித்சிங் ஜடேஜா, ரவி பிஷ்னோய், விஷால் ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் தனது இன்னிங்ûஸ தொடங்கிய குஜராத், புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 71 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்திருந்தது. பிரியங்க் பஞ்சல் 117, மனன் ஹிங்ராஜியா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, முதல் விக்கெட்டாக ஆர்யா தேசாய் 73 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.

மும்பை 270: இதனிடையே, 2-ஆவது அரையிறுதியில் விதர்பாவுக்கு எதிராக மும்பை முதல் இன்னிங்ஸில் 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில் பேட் செய்த விதர்பா 383 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தனது இன்னிங்ûஸ விளையாடிய மும்பை செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாள் ஆட்டத்தில் தனுஷ் கோடியான் 33, ஆகாஷ் ஆனந்த் 11 பவுண்டரிகளுடன் 106, மோஹித் அவஸ்தி 10 ரன்களுக்கு வெளியேற, மும்பை இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

விதர்பா தரப்பில் பார்த் ரெகாதெ 4, யஷ் தாக்குர், ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 2, தர்ஷன் நல்கண்டே, நசிகெட் புத்தே ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 113 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய விதர்பா, புதன்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. யஸ் ரத்தோட் 59, கேப்டன் அக்ஷய் வத்கர் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனர். அதர்வா டைட் 0, துருவ் ஷோரே 13, டேனிஷ் மேல்வர் 29, கருண் நயார் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

Read Entire Article