ARTICLE AD BOX
பிரிக்ஸ் கரன்சி.. டிரம்புக்கு எதிராக இந்தியாவிடம் இருக்கும் அஸ்திரம்! பம்பும் அமெரிக்கா!
நியூயார்க்: டாலரின் ஆதிக்கத்தை, பிரிக்ஸ் கரன்சி முடிவுக்கு கொண்டுவரும் என்று பேச்சுகள் எழுந்திருக்கின்றன. பிரிக்ஸ் கரன்சி என்று ஒன்று உருவானால் அதில் இந்தியாவுக்கு முக்கிய ரோல் இருக்கும். இப்படி இருக்கையில் இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா தனது கவலையை எழுப்ப தொடங்கியுள்ளது.
இது இந்தியாவுக்கு பாசிட்டிவ் சைன்! வரி விஷயத்தில் இந்தியாவை சீண்டாமல் இருக்கும் வரை அமெரிக்காவுக்கு பிரச்சனை இல்லை.

இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகையின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். "ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதும், அமெரிக்க டாலருக்கு மாற்றாக கரன்சியை உருவாக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதும் இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள வர்த்தகத்திற்கு தடையாக இருக்கிறது. இப்படி செய்வது இந்தியா மீது பாசத்தை உருவாக்காது.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் நியாயமானதாக இருக்க வேண்டும். இந்தியாவுடன் வலுவான கூட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்" என்பதுதான் அவர் சொன்ற சேதி.
டாலரின் ஆதிக்கம்:
இந்த விஷயம் இந்தியாவுக்கு இரண்டு உண்மைகளை உணர்த்தியுள்ளது. ஒன்று பிரிக்ஸ் கரன்சி மூலம் அமெரிக்காவை பணியவைக்க முடியும். இரண்டாவது நியாயமான வர்த்தகம் என்கிற போர்வையில் இந்தியா மீது கூடுதல் வரியை விதிக்க அமெரிக்கா கொஞ்சம் கூட தயக்கம் காட்டவில்லை.
முதல் விஷயத்தை டிகோட் செய்வோம். டாலர் ஏன் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது? இதற்கு காரணம் இயற்கை வளங்கள் கொண்ட நாடுகளை அமெரிக்கா தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதுதான். உதாரணமாக அரபு நாடுகளை எடுத்துக்கொள்வோம். ஈரான், ஈராக் தவிர பெரும்பாலான அரபு நாடுகள் அமெரிக்காவின் கட்டுக்குள்தான் இருக்கின்றன. இங்கிருந்துதான் உலகம் முழுவதும் பெட்ரோல் ஏற்றுமதியாகிறது.
ஒரு பொருளை வாங்க பணம் கொடுக்க வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் எனில்? அவர்கள் நாட்டு பணத்தைதானே கொடுக்க வேண்டும்?
1. சவூதி அரேபியா - ரியால்
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - திர்ஹாம்
இந்தியாவுக்கு சிக்கல்:
இந்த இரண்டு நாடுகளிலிருந்துதான் அதிக அளவு பெட்ரோல் ஏற்றுமதியாகிறது. ஆனால் இந்த நாடுகளின் கரன்சியில் (ரியால், திர்ஹாம்) பெட்ரோல் விற்கப்படுவதில்லை. மாறாக அமெரிக்க டாலரில்தான் விற்கப்படுகிறது. எனவே பெட்ரோலை வாங்க விரும்பும் நாடுகள் முதலில் டாலரை வாங்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை இன்றைய தேதியில் 1 அமெரிக்க டாலர் ரூ.87.22க்கு சமம். அதாவது ரூ.87.22 கொடுத்தால்தான் ஒரு டாலரை வாங்க முடியும். தலையை சுற்றி மூக்கை தொடுகிற கதை இது.
எல்லா நாடுகளுக்கும் இதே நிலைமைதான். எனவே பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) டாலருக்கு மாற்றான கரன்சியை யோசித்து வருகின்றன. ரஷ்யா இதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகிறது. முதற்கட்டமாக சொந்த நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
உலக வணிகத்தை கட்டுப்படுத்தும் டாலர்:
அதாவது, நம்மூர் ரூபாயை (Rupee) வாங்கிக்கொண்டு பெட்ரோலை விற்று வருகிறது. எனவே நமக்கும் நல்ல லாபம். டாலர் வாங்கி அதை வைத்து பெட்ரோலை வாங்குவததை விட.. நம்மூர் ரூபாயை கொடுத்து பொருள் வாங்குவது ஈசி.
இந்த வர்த்தகம் ஒருபடி மேலே போய், பிரிக்ஸ் நாடுகளுக்கு என சொந்தமாக ஒரு கரன்சியை உருவாக்கினால் எப்படி இருக்கும்? என்று யோசனை எழுந்திருக்கிறது. இயற்கை வளங்கள் வேண்டுமா? ரஷ்யாவும், பிரேசிலும் அதை விற்க தயாராக இருக்கின்றன. பெட்ரோல் வேண்டுமா? ரஷ்யா ரெடியாக இருக்கிறது. டெக்னாலஜி பொருட்கள் வேண்டும்? சீனா ரெடி, ஒரு காலத்தில் சைனா பொருட்கள் என்றாலே மோசமான பார்வை இருந்து வந்தது. ஆனால் இப்போது இது மாறியிருக்கிறது.
பிரிக்ஸ் கரன்சி:
அதேபோல உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள் வேண்டுமா? கில்லி மாதிரி சப்ளை செய்ய இந்தியா ரெடியாக இருக்கிறது. ஆக எல்லா வளங்களும் பிரிக்ஸ் நாடுகளுக்குள் இருக்கின்றன. எனவே, பிரிக்ஸ் நாடுகளுக்கு என பொதுவான கரன்சியை உருவாக்கினால் டாலரை ஒழித்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மளமளவென குறைந்துவிடும். அப்புறம் என்ன விலைவாசியும் குறைய தொடங்கும்.
இப்போது இரண்டாவது விஷயத்தை டீகோட் செய்வோம். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரியை போட்டு இருக்கிறது. காரணம் அமெரிக்காவும் இந்தியாவும் சம அளவு பொருளாதாரம் கொண்ட நாடுகள் கிடையாது. எனவே இந்த வரி மூலமாக கூடுதல் இழப்பு ஏற்பட்டால் அதை அமெரிக்கா சமாளித்துக்கொள்ளும். இந்தியாவால் அது முடியாது. உண்மையான இந்த நிலவரத்தை பற்றி அமெரிக்கா தெரிந்து வைத்திருந்தும் கூட.. இந்தியாவுக்கு கூடுதல் வரியை போடுவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
இந்தியா மீதான வரி:
வரி போட்டா என்ன என்று கேட்கிறீர்களா? அது நம்மை போன்ற சமானியர்களையும் பாதிக்கும். உதாரணமாக இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழம் 1 டாலர் என அங்கு விற்பனையாகிறது. இப்போ டிரம்ப் 100% வரியை விதிக்கிறார் எனில், மாம்பழத்தின் விலை 2 டாலராக உயரும். எனவே அமெரிக்க மக்கள் இந்திய மாம்பழங்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். இதனால் இங்கு மாம்பழ ஏற்றுமதி பாதிக்கப்படும்.
யாருக்கு பாதிப்பு?:
இந்த ஏற்றுமதியை நம்பியிருக்கும் மாம்பழ வியாபாரி, தரகர், கூலி ஆட்கள், வாடகை வாகனம் ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் சிக்கலை எதிர்கொள்வார்கள். மோடியும், டிரம்பும் நண்பர்களாக இருந்தாலுமே கூட வரி விஷயத்தில் அமெரிக்கா பின்வாங்கவில்லை. எனவே, பிரிக்ஸ் கரன்சியை வைத்து அமெரிக்காவை நமது வழிக்கு கொண்டுவர முடியும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனை ஹோவர்ட் லுட்னிக் தனது பேச்சில் உறுதி செய்திருக்கிறார்.
இந்தியாவிடம் உள்ள பிரம்மாஸ்திரம்:
பிரிக்ஸ் கரன்சி வெறுமென டாலருக்கு மாற்றான கரன்சியாக மட்டும் இருக்காது, அது உலக வங்கிக்கு மாற்றான ஒரு அமைப்பை உருவாக்கி பலப்படுத்தும். தமிழ்நாடு அரசு உலக வங்கியிலிருந்து பல்வேறு திட்டங்களுக்காக கடன் வாங்கியிருக்கிறது. இந்த கடன் ஒன்னும் சும்மா தரமாட்டார்கள். சில நிபந்தனைகளை விதிப்பார்கள். உதாரணமாக தனியார் போக்குவரத்தை அதிகரிப்பது, ஒப்பந்த பணியாளர் எனும் முறையை உருவாக்குவது, அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் திட்டங்களை வெட்டுவது ஆகியவைதான் இந்த நிபந்தனைகள்.
இப்போது புரிகிறதா போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் இன்னும் இதர துறையை சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஏன் ஈடுபடுகிறார்கள் என்று!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
- 'கோல்டன் டீல்' கொடுக்கும் ரஷ்யா.. டிரம்ப்பை பழிவாங்க இந்தியாவுக்கு இதுவே சரியான வாய்ப்பு!
- மோடியின் இந்தியா ஒழிக.. அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு.. ஸ்பிரேயில் எழுதிய சர்ச்சை வாசகம்
- புதினை எச்சரித்த டிரம்ப்.. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடை.. ஆக்ஷனுக்கு ரெடியான அமெரிக்கா? பரபரப்பு
- அமெரிக்காவுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட கனடா.. சீனா வைத்த செக்! இப்போ இப்படி ஆயிடுச்சே!
- கைவிட்ட ட்ரம்ப்.. ராத்திரி நேரத்தில் வேலையை காட்டிய ரஷ்யா! உருக்குலைந்த உக்ரைன்.. சீறிய ட்ரோன்கள்..!
- அந்த பேச்சு பேசுன அமெரிக்காவுக்கு இது தேவை தான்! இப்போ என்ன செய்யப்போகிறார் டிரம்ப்?
- நாடாளுமன்றத்தில் வெடித்த புதிய கல்விக் கொள்கை விவகாரம்.. அவை ஒத்திவைப்பு