ARTICLE AD BOX

பிராக்,
7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா 44-வது நகர்த்தலில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தார்.
அரவிந்த் சிதம்பரம் (இந்தியா)- சாம் ஷன்லாந்த் (அமெரிக்கா) இடையிலான ஆட்டம் 47-வது நகர்த்தலில் டிரா ஆனது. மற்ற ஆட்டங்களும் டிராவில் முடிந்தது.
4-வது சுற்று முடிவில் அரவிந்த் சிதம்பரம், பிரக்ஞானந்தா தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.�