பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை...!

3 days ago
ARTICLE AD BOX

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.prabudeva

இந்த நடன நிகழ்ச்சி பிப்ரவரி 22-ம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது.

🙏 pic.twitter.com/vVhhmzvEdf

— S r u s h t i i D a n g e (@srushtiDange) February 20, 2025


இந்த நடன நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தற்போது பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். மரியாதை இல்லாத இடத்தில் தன்னால் வேலை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

Read Entire Article