பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

4 hours ago
ARTICLE AD BOX

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் போலீஸாா் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவா் இருப்பதைக் கண்டனா். போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Read Entire Article