ARTICLE AD BOX

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் (வயது 85) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிகிச்சை முடிந்து விரைவில் பேசுதாஸ் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் ரசிகர்களை வசீகரித்து வருபவர் கர்நாடக இசைக் கலைஞரும் பின்னணி பாடகருமான யேசுதாஸ். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும், தேசிய விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.
The post பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…! appeared first on Rockfort Times.