பிரபல பாடகர் யேசுதாஸுக்கு என்ன ஆச்சு..? திடீர் உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!!

2 hours ago
ARTICLE AD BOX

பிரபல பாடகரான யேசுதாஸ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.ஜே.யேசுதாஸ், கர்நாடக இசைக் கலைஞரும் புகழ் பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில், வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

அதேபோல் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த பாடகராக விருது பெற்றுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் யேசுதாஸ் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் தான், கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யேசுதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ரத்த அணுக்கள் தொடர்பாக பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் யேசுதாஸின் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இலவச ரேஷன் அரிசி வேண்டுமா..? அப்படினா இந்த வேலையை உடனே முடிங்க..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

The post பிரபல பாடகர் யேசுதாஸுக்கு என்ன ஆச்சு..? திடீர் உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article