பிரபல நடிகை பிந்து கோஷ் காலமானார்… பெரும் சோகம்‌… இரங்கல்…!!

18 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான கோழி கூவுது என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிந்து கோஷ். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடிகை பிந்து கோஷ் நடித்துள்ளார். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீப காலமாக உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது காலமானார். மேலும் இவருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருந்த நிலையில் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக சமீபத்தில் பேட்டிகளில் கூட கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று இவர் உடல்நல குறைவினால் மரணம் அடைந்த நிலையில் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article