பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார்…!

19 hours ago
ARTICLE AD BOX

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார். 80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்ட நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தினர்.

The post பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார்…! appeared first on Rockfort Times.

Read Entire Article