பிரபல சின்ன கவுண்டர் பட தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி. நடராஜன் காலமானார்…!!!

3 hours ago
ARTICLE AD BOX

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனர் நடராஜன் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் காலமானார். இன்று மாலை அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் முள்ளும் மலரும், நடிகர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர், ஜெயலலிதாவின் நதியை தேடி வந்த கடல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவருடைய தயாரிப்பில் தான் இயக்குனர் மகேந்திரன் முதன் முதலில் அறிமுகமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Read Entire Article