ARTICLE AD BOX

தமிழ்த்திரை உலகில் இளம் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் காட்டில் அடைமழைதான். கடைசியாக வெளிவந்த லவ் டுடே படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். இப்போது வெளியாகி உள்ள டிராகன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிப்பும் மாஸ்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். இது கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் மாஸாக இருந்தது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் தனித்துவத்தையேக் காட்டுகிறது.
நல்ல சேதி: இன்னொரு விஷயம் என்னவென்றால் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மெசேஜைச் சொன்னது இந்தப் படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

குறுக்கு வழியில் போனால் வாழ்வில் எளிதில் முன்னேறி விடலாம் என்றே பலரும் நினைப்பார்கள். அதனால் அவர்கள் பாதையிலேயே பயணம் செய்கிறான் ஹீரோ. ஆனால் கடைசியில் ஜெயிப்பது நேர்மைதான் என்பதையே படம் தோலுரித்துக் காட்டுகிறது.
நேர்வழி: அரியர்ஸ் போட்டு படிப்பது மாஸ் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறான் ஹீரோ. அதற்கு பதிலாக என்னென்ன தண்டனைகள் கிடைக்கு? அதே நேரம் எப்படி எப்படி கஷ்டப்பட வேண்டியுள்ளது? என்னென்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியுள்ளது? அதே நேரம் நேர்வழியில் பயணித்தால்; அரியர்ஸ் போடலைன்னா எப்படி முன்னேறி இருக்கலாம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.
இந்தப் படத்தில் நடக்கும் சில சம்பவங்கள் நமது வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் ஒத்துப்போகிறது. இதுதான் ரசிகர்களைக் கவரக் காரணம். இந்தப்படத்தின் வசூல் என்னன்னு பார்க்கலாமா...
6 நாள் வசூல்: இந்திய அளவில் முதல்நாளில் 6.5கோடி, 2வது நாள் 10.8கோடி, 3வது நாள் 12.75கோடி, 4வது நாள் 5.8கோடி, 5வது நாள் 5.1 கோடி, 6வது நாள் 4.75 ஆக மொத்தம் 45.70கோடி. உலகளவில் 60கோடியை நெருங்கியுள்ளது. இந்த வாரம் முடிவில் 100கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.