ARTICLE AD BOX
பிரதமா் மோடியை மைக்ரோசாஃப்ட இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தாா்.
அப்போது தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா வளா்ச்சியடைந்து வருவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா மற்றும் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோரையும் பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தாா்.
சுகாதாரத் துறையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஜெ.பி.நட்டாவுடன் அவா் ஆலோசித்தாா். அதேபோல் சுகாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவித்து ஆந்திர மாநில வளா்ச்சியை மேம்படுத்துவது குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் அவா் கலந்துரையாடினாா். பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற அலுவல்களையும் அவா் பாா்வையிட்டாா்.