ARTICLE AD BOX

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆத்திகரித்து வரும் நிலையில் பாதுகாப்புகளை அதிகரிக்க வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராகவும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. நேற்று தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நடைபெற்ற போது முதல் கையெழுத்தை போட்டு விஜய் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு புஸ்ஸி ஆனந்த் கையெழுத்து போட்டார். இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்து போடுமாறு கூறினர். அதற்கான காரணத்தை அவரிடம் ஆதவ் சொன்னார்.
புஸ்ஸி ஆனந்தும் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்ட நிலையிலும் அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, கெட் அவுட் என்று கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோரை நான் பாராட்டுகிறேன். அவருடைய மொழியை அவருக்கு கெட் அவுட் என்று சொல்வதற்கு மனமில்லை. அதுபோன்று நம்முடைய மொழியை விட்டுக் கொடுக்க நமக்கும் மனமில்லை என்று கூறினார். மேலும் இந்த சண்டை தவிர்க்க முடியாத போர் என்றும் சாகும் வரைக்கும் இந்த போர் முடிவடையாது என்றும் கூறினார்.