ARTICLE AD BOX
எட்டாவது ஊதியக் குழுவை மத்திய அரசு அமல்படுத்தும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கணக்கீட்டின்படி, அவர்களின் சம்பளம் சுமார் 50 சதவீதம் வரை உயரும்! பணம் மார்ச் மாதத்தில் வருமா?

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், சம்பளம் முதல் ஓய்வூதியம் வரை கணிசமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எட்டாவது ஊதியக் குழு தொடர்பான முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. எட்டாவது ஊதியக் குழு அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய ஊதியக் குழுவின் கீழ் தங்கள் சம்பளத்தில் என்ன மாற்றம் வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் அறிய விரும்புகிறார்கள்.

ஜனவரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது. பிரதமர் நரேந்திர மோடி கமிஷன் அமைக்க ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார்.

இந்த அறிவிப்பு 2025-26 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. புதிய ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

எட்டாவது ஊதியக் குழுவில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் பேக்டர் 2.28 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர், இது அடிப்படை சம்பளத்தை 40-50% அதிகரிக்கும்.

உண்மையில், ஃபிட்மென்ட் பேக்டர் மத்திய அரசு ஊழியர்களின் புதிய அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிடுவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஃபிட்மென்ட் பேக்டர் 2.6 முதல் 2.85 வரை இருந்தால், அடிப்படை சம்பளம் 25-30% வரை அதிகரிக்கலாம். மேலும், ஓய்வூதியமும் அதே அளவில் அதிகரிக்கலாம். கணக்கீட்டின்படி, தற்போது ரூ.20,000 அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியரின் வருமானம் ரூ.46,600 முதல் ரூ.57,200 வரை இருக்கலாம்.
இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு