ARTICLE AD BOX
இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சமான 85,978 புள்ளிகளை தொட்டது. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தை சரிவு காண தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் தனது உச்சத்தை காட்டிலும் சுமார் 10,000 புள்ளிகள் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய பங்குச் சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமாக நிலையில்லாமல் உள்ளது.
இந்த சூழ்நிலையில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான 'ரிச் டாட் புவர் டாட்' புத்தகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, அடுத்த மாதம் உலக வரலாற்றில் மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சி நிகழும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இது சர்வதேச பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
ராபர்ட் கியோசாகி 2013ல் எழுதிய 'ரிச் டாட்ஸ் ப்ராபசி' என்ற புத்தகத்தில், முந்தைய பொருளாதார வீழ்ச்சிகளை காட்டிலும் பெரிதாக இருக்கும் என்று வரவிருக்கும் ஒரு பங்குச் சந்தை வீழ்ச்சி பற்றி எச்சரிக்கை செய்து இருந்தார். ஆனால் இது குறித்து யாரும் பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் கியோசாகி போட்ட டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணிப்பு அல்லது தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதாகவும், 2025 பிப்ரவரியில் இந்த வீழ்ச்சி ஏற்படும் என்றும் அந்த டிவிட் தெரிவிக்கிறது.
இந்த செய்தியால் கியோசாகி பீதியடைய செய்யவில்லை. மாறாக இந்த வீழ்ச்சி ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பை வழங்கும் என்று அவர் நம்புகிறார். இந்த வீழ்ச்சியில் அனைத்தும் விற்பனைக்கு வரும். பங்குச் சந்தை சரிவின் போது கார்கள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
பங்கு மற்றும் பத்திரங்கள் சந்தையில் இருந்து மூலதனம் வெளியேறி, மாற்று முதலீட்டு வாய்ப்புகளில் குறிப்பாக பிட்காயினில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான, அதிக லாபகரமான விருப்பங்களை தேடுவதால் கிரிப்போகரன்சி வளர்ச்சியை அனுபவிக்கும் என்றும் கியோசாகி கூறுகிறார்.