பிப்ரவரி மாத கடைசி நாளான இன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

10 hours ago
ARTICLE AD BOX

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க வரும். அந்தவகையில் இன்று 4 படங்கள் வெளியாக உள்ளன. அந்த படங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அகத்தியா :

இயக்குநர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தின் மூலம் பா.விஜய் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 2018-ல் வெளியான ‘ஆருத்ரா’ படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து தற்போது ஜீவாவை வைத்து ‘அகத்தியா’ படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
இன்று திரையரங்குகளில் ரிலீஸாகும் 6 படங்கள் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?
Aghathiyaa, Sabdham, kooran, Kadaisi Thotta films

ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.

சப்தம் :

2009-ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் நடிகர் ஆதி நடித்திருந்தார். 'ஈரம்' படத்திற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து ஆதி- அறிவழகன் கூட்டணி ‘சப்தம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. ஹாரர் கதைக்களப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டிரெய்லர் மக்களிடையே படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சப்தம்’ சத்தமில்லாமல் சாதனை படைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
2025-ல் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்... ரசிகர்களை கொண்டாட வைக்கும் அப்டேட்!
Aghathiyaa, Sabdham, kooran, Kadaisi Thotta films

கூரன் :

நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தில் பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
ஓடிடி பிரியர்களா? இந்த வாரம் ரிலீஸான படங்கள் லிஸ்ட் இதோ... மிஸ் பண்ணாம பாருங்க!
Aghathiyaa, Sabdham, kooran, Kadaisi Thotta films

கடைசி தோட்டா :

இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் குணச்சித்திர நடிகரான ராதா ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'கடைசி தோட்டா'. இதில் 'டத்தோ' ராதா ரவி, ஸ்ரீ குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி. ஆர். சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர் வி ஆர் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. சீட் நுனியில் உட்காரவைக்கும் மர்டர் மிஸ்டரி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று வெளியாகிறது.

Read Entire Article