பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜ் - இவர் யார்?

6 days ago
ARTICLE AD BOX

பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜ் - இவர் யார்?

காணொளிக் குறிப்பு, மிதாலி ராஜ்: ஆண்கள் கோலோச்சும் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் இவர் யார்?
பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜ் - இவர் யார்?
7 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடக்க நிலையில் இருந்தது.

ஆனால் மிதாலி ராஜ் தயங்கவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பின், கிரிக்கெட் ஜாம்பவான் ஆனார். 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிக நீண்ட கேப்டன் பதவிக்காலம்.

2021ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீராங்கனை ஆனார்.

ஹைதராபாத்தில் இருந்த ஒரு பயிற்சியாளர் மிதாலி ராஜின் தந்தையை சம்மதிக்க வைத்ததில்தான் இவை அனைத்தும் தொடங்கியது.

மிதாலி கிரிக்கெட்டை தொடங்கியபோது, ​​மகளிர் கிரிக்கெட் குறைவான நிதி அளவு கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது.

இதனால் தரம் குறைவான பயிற்சி உபகரணங்களே இருந்தன.

அந்த அணி கற்கள் நிறைந்த மைதானங்களில் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.

மகளிர் கிரிக்கெட்டில் தனியார் ஸ்பான்சர்கள் ஆர்வம் காட்டவில்லை.

2006-ல் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-யுடன் இணைக்கப்பட்டது.

பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாகும்.

2022-ல் பிசிசிஐ ஆண், பெண் வீரர்களுக்கு சம போட்டி ஊதியம் அறிவித்தது.

சம போட்டி ஊதியம் என்பதை வலுவாக ஆதரித்து வந்தவர்களில் மிதாலியும் ஒருவர்.

கிரிக்கெட்டில் அளித்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயர்ந்த விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் மிதாலிக்கு வழங்கப்பட்டது.

2022-ல் ஓய்வு பெற்ற மிதாலி ராஜ், தற்போது இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக உள்ளார்.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் எழுச்சிக்கு இணையாக கருதப்படும் இவரது பயணம் பாலிவுட்டில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article