ARTICLE AD BOX
பின்னாடி பேசுவாங்க! மணிமேகலைக்கு நிறைய வலி இருக்கு! தங்கமான பொண்ணு! ஆனால்.. பிரபலம் வருத்தம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை குறித்து பாபா பாஸ்கர் எமோஷனலாக பேசியிருக்கிறார். மணிமேகலைக்கு நிறைய வலி இருக்கிறது. தங்கமான பொண்ணு ஆனால் அவருடைய முதுகுக்கு பின்னாடி சிலர் தப்பா பேசுவாங்க என்று கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் மணிமேகலை பலருக்கும் பரிச்சயமானவர். அதுபோல சோசியல் மீடியாவில் அடிக்கடி வீடியோவை வெளியிட்டு பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகியது பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்து வந்தனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆப்போசிட்டாக பேசி வந்தனர்.

பரபரப்பான சீசன்
விஜய் டிவி நிகழ்ச்சியில் மணிமேகலை இருக்கும்போது அவரை கலாய்த்து அவரோடு நட்பு பாராட்டிய பலர் மணிமேகலைக்கு எதிராக வீடியோக்கள் வெளியிட்டு வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. மணிமேகலை நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்தார். ஐந்தாவது சீசனில் தான் நடுவராக இருந்தார். அந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் வெளியேற்றம்
அதாவது அந்த சீசனில் நான்கு சீசனாக தொகுப்பாளராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென வெளியே போவதாக அறிவித்திருந்தார். அதுபோல அந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தொடங்கி நடத்தி வந்த மீடியா மிஷன்ஸ் நிறுவனமும் வெளியேறிவிட்டது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த பல பிரபலங்கள் சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு போய்விட்டனர். அப்போதுதான் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதுபோல நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில மாதங்கள் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிமேகலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளினி என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டிற்குள் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். நான் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் என்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் போது அந்த இடத்தில் இருப்பது எனக்கு சரி படவில்லை எனக்கு சுயமரியாதை முக்கியம். அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுதான் பரபரப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
ஜீ தமிழில் அறிமுகம்
அதற்குப் பிறகு மணிமேகலை சில மாதங்கள் கழித்து சமீபத்தில் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக ஜீ தமிழில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் நடுவராக பாபா பாஸ்கர் தொடர்ந்து வருகிறார். இவரும் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையோடு வேலை பார்த்தவர் தான்.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இருவருடைய காம்போ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மணிமேகலை மற்றும் பாபா பாஸ்கர் எல்லோரும் மாறி மாறி கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு போட்டியாளர் தன்னுடைய அப்பா அம்மா குறித்து கண்கலங்க பேசி இருந்தார். தன்னுடைய அப்பா அம்மாவின் கனவை நிறைவேற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
கண் கலங்கிய மணிமேகலை
அதுபோல மேடைக்கு தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவையும் கூப்பிட்டு வந்து அவர்களை பெருமைப்படுத்தி இருந்தார். இதை பார்த்து மணிமேகலை எமோஷனலாகி அழுதுவிட்டார். அப்போது எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு எனக்கு இந்த மாதிரி சென்டிமென்ட் காட்சிகளை பார்த்தால் பீலிங் ஆகிவிடும். நான் என்னுடைய கல்யாணத்திற்கு பிறகு அப்பா அம்மா கூட பேசாதது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து விட்டது.அதனால் தான் என்னால் பேச முடியவில்லை.அழுகை வருகிறது என்று பேசியிருந்தார்.
சிறிது நேரத்திற்கு பிறகு நான் ஆரம்பத்தில் எட்டு வருஷமா ஒரே சேனலில் தொகுப்பாளியாக இருந்தேன். அதற்குப் பிறகு ஒரு காமெடி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் அப்போது இவங்களால நடிக்க முடியுமா என்று பலர் கேட்டாங்க. ஆனால் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட பிறகு மணிமேகலைக்கு ஆங்கிரிங் தெரியுமா? என்று கேட்க தொடங்கிட்டாங்க.
பாபா பாஸ்கர் உருக்கம்
அதனால்தான் எந்த இடத்தில் நாம நிராகரிக்கப்படுமோ அதை நாம பெஸ்ட்டா செய்யணும் அவ்வளவுதான் என்று கண்கலங்கிய படியே மணிமேகலை பேச அந்த நேரத்தில் நடுவர் சீட்டில் இருந்த பாபா பாஸ்கர் இறங்கி வந்து மணிமேகலைக்கு நிறைய கஷ்டம் இருக்கு, ரொம்ப வலி அனுபவிச்சிட்டா மணிமேகலை ரொம்ப நல்ல பொண்ணு, மணிமேகலை கிட்ட நல்லா பேசுவாங்க கொஞ்சு வாங்க ஆனா அவ போனதும் அவ பின்னாடி இதெல்லாம் ஒண்ணா என்று பேசுவாங்க.
சில பொண்ணுங்க தான் புரிஞ்சுக்காம பேசுறாங்க.. பொடிவைத்து பேசிய பிரியங்கா.. இந்த பதில் அவருக்கா?
இங்கதான் என் தலைவர் ஒன்னு சொல்லிருக்காரு குறைக்காத நாயும் இல்ல, குறை கூறாத வாயும் இல்லை என்று சொல்லி இருக்காரு. அதுபோல யார் என்ன சொன்னாலும் நாம இப்படித்தான் என்று மேலே போயிட்டே இருக்கணும் என்று பாபா பாஸ்கர் பாராட்டி இருக்கிறார். அதுபோல இன்னொரு செய்தி சேனல் ஒன்றில் பாபா பாஸ்கர் பேசுகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான், மணிமேகலை, பாலா எல்லோரும் ஒரே குடும்பமா இருந்தோம்.
குழந்தை மனசு
அப்புறம் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு வந்துட்டேன். மணிமேகலையும் பாலாவும் அங்கேயும் இருந்தாங்க. அதற்கு பிறகு பாலா இப்போ கதாநாயகனாக மாறி இருக்கிறான். மணிமேகலைக்கு பெரிய சரிவு ஏற்பட்டது ஆனாலும் இப்போ நல்ல இடத்தில் வந்து இருக்கிறா. அவளுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக தான் நடக்கும். மணிமேகலைக்கு ஒரு குழந்தை மனசு என்று பெருமையாக பாபா பாஸ்கர் பேசியிருக்கிறார்.
- 8 வருஷமா அந்த சேனலில் இருந்தேன், அப்படி சொன்னாங்க! கண்கலங்கிய மணிமேகலை.. பாபா மாஸ்டர் சொன்ன வார்த்தை
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
- ஆடு வளர்ப்பது அழகு பார்க்க கிடையாது.. பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்த டிரம்ப்!
- குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கி வைங்க.. வேண்டாத வேலை பார்த்த ட்ரம்ப்! இனி தொடர்ந்து உச்சம் தானாம்!
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
- சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்
- Thengai Poo: "தேங்காய் பூ தேங்காய் பூவு"னு கூவி கூவி விற்பாங்களே! அந்த பூ உடல் எடையை குறைக்குமாமே!
- பழைய ஓய்வூதிய திட்டம்.. கைவிரித்த தங்கம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
- குருப்பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 3 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
- பங்கு சந்தையில் பணம் போட்டவர்களும், தங்கத்தில் பணத்தை போட்டவர்களும்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்
- புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்! பெங்களூர் ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. ரயில்வேக்கு தேவைதான்
- அசத்துதே அரசு கேபிள்..தூக்கி வீசப்படும் தனியார் செட்டாப் பாக்ஸ்கள்! அடடே வருதே IPTV.. செம அறிவிப்பு
- பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்
- உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?