பிச்சிக்குது ரீசார்ஜ்.. ரூ.300-க்கு முடிச்ச ஏர்டெல்.. அன்லிமிடெட் கால்கள்.. 28 ஜிபி டேட்டா.. 4 ஆப்ஷன்!

1 day ago
ARTICLE AD BOX

பிச்சிக்குது ரீசார்ஜ்.. ரூ.300-க்கு முடிச்ச ஏர்டெல்.. அன்லிமிடெட் கால்கள்.. 28 ஜிபி டேட்டா.. 4 ஆப்ஷன்!

News
oi-Harihara Sudhan
| Published: Wednesday, February 26, 2025, 12:29 [IST]

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு ரூ.300 செலவில் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. இந்த ஏர்டெல் திட்டங்கள் மலிவான விலைக்கு சர்வீஸ் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளை கொடுக்கிறது. விவரம் இதோ.

ஏர்டெல் ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 199 Prepaid Plan): ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் தொடங்குகிறது. இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகைகள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கின்றன.

பிச்சிக்குது ரீசார்ஜ்! ரூ.300-க்கு முடிச்ச ஏர்டெல்.. அன்லிமிடெட் கால்!

ஏர்டெல் ரூ 219 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 219 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. ஆகவே, மாதாந்திர வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை கொடுக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே லம்ப்-சம் முறையில் 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதுவும் லம்ப்-சம் சலுகையாக இருக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 என்ற வரம்பு கிடையாது. இந்த திட்டங்கள் லம்ப்-சம் டேட்டா சலுகையில் இருக்கின்றன, தினசரி டேட்டா வேண்டுமானால், பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.

ஏர்டெல் ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 249 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தை போலல்லாமல், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, ஆகவே, 24 ஜிபி டேட்டாவை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதேபோல எஸ்எம்எஸ் சலுகை வருகிறது.

அதாவது, தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் என்ற வரம்பில் கொடுக்கப்படுகிறது. மேலும், வழக்கமான அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. இதற்கு அடுத்து வரும் ப்ரீபெய்ட் திட்டமானது, 28 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளை கஸ்டமர்களுக்கு ஏற்ப கொடுக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெஸ்ட் திட்டமாகும்.

ஏர்டெல் ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 299 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் தினசரிக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. 28 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகை போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம். இந்த நான்கு திட்டங்களிலும் ப்ரீ ஹலேடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும், ஸ்பேம் வாய்ஸ் கால்கள் (Spam Voice Call), ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் (Spam SMS) அலெர்ட் கிடைக்கிறது. முதல் மூன்று திட்டங்களில் ஓடிடி இருக்கிறது.

அதாவது, பிரீமியம் சந்தா இல்லாமல், இலவசமாக கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xtream Play) சலுகையை இந்த திட்டங்கள் கொடுக்கிறது. ரூ.300 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், வேலிடிட்டியும் ஓரளவுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Airtel Rs 199 Plan With Unlimited Voice Calls 2GB Data 28 Days Validity Check Service Validity Plans
Read Entire Article