ARTICLE AD BOX
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸுக்கு, நடிகர் சிம்பு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பாலாஜி முருகதாஸ் நடித்த "ஃபயர்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், பாலாஜி முருகதாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் சிம்பு பிப்ரவரி 26ஆம் தேதி, மாலை 5.05 மணிக்கு வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளின் பல திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை, சிம்பு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதனை தொடர்ந்து, பாலாஜி முருகதாஸிற்கும் அதே உதவியை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ஆம் ஆண்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், சிம்பு தொகுப்பாளராக இருந்த போது, அதன் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.