ARTICLE AD BOX
பிஎஸ்என்எல் நிறுவனமானது, ரூ.397க்கு, 150 நாள்களுக்கு அளவில்லா அழைப்பு மற்றும் நாள்தோறும் 2ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவையை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதனால், பிஎஸ்என்எல் வாடிக்கையார்கள் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு, ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்துக்கும்.. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வெறும் 28 நாள்களுக்கே அளவில்லா அழைப்பு மற்றும் டேட்வுக்கு கிட்டத்தட்ட ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கும் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஜாக்பாட் திட்டம்தான்.