பி.பி அதிகமா இருந்தால் 'காபி' அதிகம் குடிக்காதீங்க! ஆய்வு சொல்வது இதுதான்!

13 hours ago
ARTICLE AD BOX

Coffee For High Blood Pressure : உயரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் காபி குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

பி.பி அதிகமா இருந்தால் 'காபி' அதிகம் குடிக்காதீங்க! ஆய்வு சொல்வது இதுதான்!

இன்றைய மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற சில பழக்க வழக்கங்களால் பலரும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ரத்த அழுத்தம். இதில் குறைந்த மற்றும் உயர் ரத்தம் என இரண்டு வகைகள் உள்ளன. அந்த வகையில், உயரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால் இதை சரியாக கவனிக்காவிட்டால், மிகவும் தீவிரமான நிலையை ஏற்படுத்தும். இது உடலின் தமனிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தத்தை பாம் செய்ய இதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியதாயிருக்கும். 

Coffee and high blood pressure in tamil

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காவிட்டால், இதயம் மற்றும் ரத்தநாளங்களில் அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். இப்போது கேள்வி என்னவென்றால் உயரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிக்கலாமா கூடாதா? உங்களது மனதிலும் இதே கேள்வி எழும்பினால், இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் ரத்த அழுத்தமா? உடனடியா கட்டுக்குள் வர இந்த '4' விஷயம் பண்ணுங்க போதும்..!!

Coffee's impact on blood pressure in tamil

பி.பி அதிகம் இருந்தால் காபி குடிக்கலாமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, காபியில் காஃபின் உள்ளதால் இது ஒரு தூண்டுதலாக நம்முடைய உடலில் செயல்படுகிறது. மேலும் இது உடலில் தற்காலிகமான ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் காஃபின் எடுத்துக்கொண்ட பிறகு பிபி 3 மணி நேரம் வரை அதிகரிக்கும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. டிபி அதிகம் உள்ளவர்கள் காபி குடிப்பது முற்றிலும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை ஆனால் குறைந்த அளவு மற்றும் எச்சரிக்கையுடன் எடுத்துக்கொண்டால், எந்த பிரச்சினையும் இருக்காது. இதற்கு ஒரு நாளைக்கு ஒரு கப் காபி மட்டும் குடிக்கலாம்.

இதையும் படிங்க: எவ்ளோ ரத்த அழுத்தம் இருந்தாலும் ஈஸியா குறைக்கலாம்.. '5' பெஸ்ட் உணவுகள்!!

coffee consumption for high blood pressure patients in tamil

உயர் பிபி உள்ளவர்கள் காபி குடித்தால் ஏற்படும் விளைவுகள்:

ஆராய்ச்சி ஒன்றில், உயரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேல் கப் காபி குடித்தார் காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இறப்பு கூட ஏற்படலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஆனால், அதற்கு நேர் மாறாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கப் காபி அல்லது கிரீன் டீ குடித்து வந்தால் இதய நோய் தொடர்பான இருப்பு அபாயம் அதிகரிக்கவில்லை என்று கண்டறிந்துள்ளன. மற்றொரு சில ஆய்வுகள் படி, காபி குடிப்பது பகை 2 நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் குறைக்கும், பசியை கட்டுப்படுத்த உதவும், மனசோர்வின் அபாயத்தை குறைக்கும் என்று பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும், காஃபினை தீங்கு விளைவிக்கும் நோக்கில் பார்க்கும்போது, அதிகப்படியான காபி குடிப்பது உயரத்தை அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இது தவிர கவலை, படபடப்பு, தூங்குவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்..

Blood pressure management in tamil

முக்கிய குறிப்பு:

- பிபி அதிகம் உள்ளவர்கள் காபி அதிகமாக குடிக்க வேண்டாம். அதன் அளவை கட்டுப்படுத்துங்கள். ஒரு நாளைக்கு ஒரு கப் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

- காபி எடுக்க நேரத்தை கவனமாக தேர்வு செய்யுங்கள்.

- சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்

Read Entire Article