ARTICLE AD BOX
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தப்படும் ஆவணம்தான் பாஸ்போர்ட். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர் என பல விவரங்கள் தேவைப்படுகிறது. இந்தநிலையில்தான், மத்திய அரசு 2025ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட் விதிகளில் முக்கியமான மாற்றங்களை சமீபத்தில் அறிவித்துள்ளது.
புதிய பாஸ்போர்ட் விதிப்படி எந்தெந்த சான்றிதழ்கள் கட்டாயம் கொடுக்கப்படவேண்டும்.. பார்க்கலாம்.
1. பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
அக்டோபர் 1, 2023 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர், மாநகராட்சி, அல்லது பிற அரசு அமைப்புகளால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. டிஜிட்டல் முறையில் பதியப்பட்ட குடியிருப்பு முகவரி
பாஸ்போர்ட் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் முகவரி அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, முகவரி தகவல் பாஸ்கோடு மூலம் சேர்க்கப்படும், இது பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
3. பெற்றோரின் பெயர் நீக்கம்
பாஸ்போர்ட் புத்தகத்தில் பெற்றோரின் பெயர்கள் இனி அச்சிடப்படாது. இது தனியுரிமையை பாதுகாக்கும் முயற்சியாகும்.
4. பாஸ்போர்ட் சேவை மையங்களின் விரிவாக்கம்
மையங்களின் அதிகரிப்பு அடுத்த 5 ஆண்டுகளில், அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களின் எண்ணிக்கை 442 லிருந்து 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்த உதவும்.
5. வண்ணக்குறியீட்டு முறை
அடையாளத்தை நெறிப்படுத்த பாஸ்போர்ட்டுகளுக்கு வண்ணக் குறியீட்டு முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெள்ளை நிற பாஸ்போர்ட்டுகள் - அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.
சிவப்பு நிற பாஸ்போர்ட்டுகள் - தூதரக அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நீல நிற பாஸ்போர்ட்டுகள் - சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப செயல்முறை :
ஆன்லைன் விண்ணப்பம் - பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதில் தேவையான தகவல்களை நிரப்பி, ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு (POPSK) செல்லலாம்.
ஆவணங்கள் - பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள், மற்றும் முகவரி சான்றுகள் போன்ற முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
நேர்காணல் மற்றும் போலீஸ் சரிபார்ப்பு - விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், நேர்காணல் மற்றும் போலீஸ் சரிபார்ப்பு நடைபெறும். இது பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் கட்டாயமாகும்.