பாவம் பாவனா.. அதை பண்ணலைன்னா உடனே டைவர்ஸ்னு சொல்றாங்க.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே!

3 hours ago
ARTICLE AD BOX

பாவம் பாவனா.. அதை பண்ணலைன்னா உடனே டைவர்ஸ்னு சொல்றாங்க.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே!

Heroines
oi-Mari S
By
| Published: Wednesday, March 19, 2025, 12:51 [IST]

சென்னை: மலையாளத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நம்மல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவனா. 15 வயதில் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போதே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான பாவனா வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள் மற்றும் அஜித்தின் அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அசல் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை பாவனா தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வளம் வந்த பாவனாவுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத கசப்பான அனுபவம் அவரை சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலக்கி வைத்தது.

Bhavana opens up netizens spreads divorce rumours if we had not posted any couple photos

ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாவனா மீண்டும் பழைய படி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது திருமண வாழ்க்கை குறித்தும் தமிழ் படங்களில் நடித்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

16 ஆண்டுகளாக தமிழில் நடிக்கவில்லை: நடிகை பாவனாவுக்கு தமிழ் சினிமாவில் இருந்த மேனேஜர் ஒரு கட்டத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகளை வழங்காத நிலையில், தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பதை தான் நிறுத்தி விட்டதாகவும், வேண்டும் என்று தமிழ் படங்களை ஒதுக்கவில்லை என்றும் அப்போது சினிமா மீது பெரிதாக ஆர்வமில்லை. லொகேஷன் போவது வெக்கேஷன் போவதுபோல ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்து வந்த நிலையில், பல பெரிய வாய்ப்புகளை தவற விட்டுவிட்டேன் என்றார்.

டைவர்ஸ்னு சொல்லிடுவாங்க: கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை நடிகை பாவனா திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், சோசியல் மீடியாவில் போட்டோ போடவில்லை என்றாலே நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்றூம் டைவர்ஸ் ஆகிவிட்டது என்றும் கமெண்ட் போடுகின்றனர். நான் சோசியல் மீடியாவில் அதிகமாக புகைப்படங்களை வெளியிடுவது கிடையாது. அந்த விஷயத்தில் பிரைவசியை ரொம்பவே எதிர்பார்ப்பேன். எப்போதாவது ஒரு போட்டோ போட்டால் கூட கணவர் காணோமே என விவாகரத்து சர்ச்சையை கிளப்பிடுவார்கள். அம்மாவுடன் தினமும் இருக்கிறோம். அதற்காக அவருடன் செல்ஃபி எடுத்து போட்டுக் கொண்டே இருப்போமா.. எனக்கு அதெல்லாம் கிரிஞ்சாக தெரியும் எனக் கூறியுள்ளார்.

புலி படத்தை தவறவிட்ட பாவனா: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக பாவனா தான் நடித்திருக்க வேண்டியது என்றும், ஆனால், சில காரணங்களுக்காக அந்த படத்தை அவர் தவறவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த நேரத்தில் பல படங்களை அலட்சியம் காரணமாக தவறவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ரவியை ரொம்ப பிடிக்கும்: தமிழ் சினிமா நடிகர்களிலேயே தனக்கு ரவி மோகனைத்தான் ரொம்பவே பிடிக்கும் என பாவனா கூறியுள்ளார். வெயில் மற்றும் தீபாவளி படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமான படங்கள். இன்னமும் பலர், என்னை சுசி என அழைத்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர் என்றார்.

FAQ's
  • நடிகை பாவனாவின் கணவர் பெயர் என்ன?

    நவீன்

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bhavana opens up netizens spreads divorce rumours if we had not posted any couple photos: நடிகை பாவனா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமண சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.
Read Entire Article