ARTICLE AD BOX
இரவு சாப்பிட்டுவிட்டு படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது, ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது, எலும்பு, மூட்டு பலவீனம் ஆன மாதிரி ஃபீல் பண்ணுகிறீர்களா? கவலைப் படாதீர்கள். நீங்கள் பாலுடன் இந்த பொருளைக் கலந்து இரவில் தூங்கும் முன்பு குடிங்க, அதில் இவ்வளவு நன்மை இருக்கிறது.
பலருக்கும் 40-ஐ கடந்துவிட்டால், இரவு படுத்தால் தூக்கம் வரவில்லை, மன அழுத்தம், எலும்பு, மூட்டு வலி என சிரமங்கள் இருப்பதை உணர்கிறார்கள். இரவு சாப்பிட்டுவிட்டு படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது, ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது, எலும்பு, மூட்டு பலவீனம் ஆன மாதிரி ஃபீல் பண்ணுகிறீர்களா? கவலைப் படாதீர்கள். உங்களுக்காக இயற்கையான கால்சியம் டிரிங்க்ஸை டாக்டர் பொற்கொடி பரிந்துரைக்கிறார்.
இயற்கையான கால்சியம் டிரிங்க்ஸ் செய்வது எப்படி அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து டாக்டர் பொற்கொடி ஹரி (@drporkodihari) யூடியூப் சேனலில் டாக்டர் பொற்கொடி கூறுகையில், “இந்த இயற்கையான கால்சியம் டிரிங்க்ஸை எடுத்துக்கொள்வதால், நம்முடைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தை வரவைக்கும். இதில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் இருப்பதால், எலும்பை வலுவாக்கி மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
அதுமட்டுமில்லாமல், இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரி செய்யும். அப்படி என்ன டிரிங்க்ஸ் என்றால், கசகசா பால்தான் அது.
இந்த கசகசா பால் எப்படி செய்வது என்றால், ஒரு கைப்பிடி அளவு கசகசா எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு பவுலில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவையுங்கள். அந்த தண்ணீருடன் கசகசாவை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து, ஒரு துணியில் வடிகட்டி பிழிந்து கசகசா பால் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த கசகசா பாலை இரவு தூங்கும் முன்பு குடித்தால், நன்றாக தூங்கலாம், மன அழுத்தம் சரியாகும், எலும்புகள் வலுவடைந்து மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கும்” என்று டாக்டர் பொற்கொடி பரிந்துரைக்கிறார்.
அதே நேரத்தில், இந்த கசகசா பாலை யாரெல்லாம் குடிக்கக் கூடாது என்றால், கர்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. தூங்குவதற்கு தூக்க மாத்திரை (Sedative) எடுத்துக்கொண்டிருப்பவர்கள், கிட்னி பிரச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த கசகசா பாலை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று டாக்டர் பொற்கொடி எச்சரிக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.