ARTICLE AD BOX
Balakrishna and Urvashi Rautela viral video: நடிகர் பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தலாவுடன் ஆடிய நடனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'டாக்கு மகாராஜ்' பட பார்ட்டியில் இருவரும் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. பாலகிருஷ்ணாவின் நடவடிக்கைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
![Balakrishna, Urvashi Rautela Party Dance Video](https://static-gi.asianetnews.com/images/01jkk5zs2wb3m4vjpmpbpq91md/balakrishaa.jpg)
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சர்ச்சைகளுக்குப் பேர்போனவர். இவரது படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படுவது சகஜமாக உள்ளது.
![Urvashi Rautela viral video](https://static-gi.asianetnews.com/images/01jhjpvq62cyy59cj10s7tgtaj/balaya-celebration.jpg)
அறுபது வயதைத் தாண்டிய நடிகர் பாலகிருஷ்ணா பொது நிகழ்ச்சிகளில் நடந்துகொள்ளும் விதம் காரணமாக பல முறை விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார். அதுபோல மீண்டும் ஒரு சம்பவத்தைச் செய்திருக்கிறார் பாலகிருஷ்ணா.
![Balakrishna Urvashi viral video](https://static-gi.asianetnews.com/images/01jh2mym2rt8gj2x9kzp659gv0/nandamuri-balakrishna-romantic-pose-urvashi-rautela-1736329613400.jpg)
பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்கு மகாராஜ்' படம் அவரது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தலாவுடன் பாலகிருஷ்ணா ஆடியுள்ள 'டபிதி, திபிதி' பாடல் ஹிட்டாகியுள்ளது. அந்தப் பாடலில் பாலகிருஷ்ணாவின் நடனமும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
![Balakrishna and Urvashi Rautela video](https://static-gi.asianetnews.com/images/01jh2n679wm28etttv3wr7gg9p/nandamuri-balakrishna-romantic-pose-urvashi-rautela-3-1736329862460.jpg)
இந்நிலையில் படக்குழுவினர் பலர் பங்கேற்ற பார்ட்டி ஒன்று அண்மையில் நடைபெற்றது. அதில், பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார். பார்ட்டியில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்டிருக்கிறார்.
![Balakrishna and Urvashi Rautela Movie](https://static-gi.asianetnews.com/images/01jgv5jvfksq5q25qhs3869zpv/screenshot-2025-01-05-163326.png)
பார்ட்டியில் பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தலாவின் நடனம் சமூக வலைத்தங்களில் வைரலாகி விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பாலகிருஷ்ணா நடிகை ஊர்வசியிடம் அத்துமீறி நடந்துகொள்வதாக நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.