ARTICLE AD BOX
பாலியல் வழக்கில் ஆஜராகாத சீமான்.. வீட்டிற்கு விரைந்த போலீஸ்.. நடந்தது என்ன?
இயக்குனராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த சீமான், தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்கிறார். மேலும், இவருக்கும் நடிகை விஜயலக்ஷ்மிக்கும் பல நாட்களாக பகை இருந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். மேலும், விஜயலக்ஷ்மி தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு சென்றதாக சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை (28.2.2025) மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!
அதாவது, விஜயலக்ஷ்மி அளித்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜராகவில்லை என்பதற்காக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமானுக்கு 4 வாரம் அவகாசம் கேட்டு கடிதம் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஓட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
The post பாலியல் வழக்கில் ஆஜராகாத சீமான்.. வீட்டிற்கு விரைந்த போலீஸ்.. நடந்தது என்ன? appeared first on EnewZ - Tamil.