ARTICLE AD BOX
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள், ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் பாலாவின் ‘வணங்கான்’ உட்பட சில தமிழ் படங்களும், சில தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் டென்ட்கொட்டா ஓடிடியில் நாளை வெளியாகிறது. அதேபோல், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான ’பாட்டல் ராதா’ என்ற திரைப்படம் நாளை வெளியாகிறது.
மேலும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரியஸாக ’ஆபீஸ்’ என்ற வெப் தொடர் நாளை முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அட்லி தயாரிப்பில் உருவான ’தெறி ’படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமான ’பேபி ஜான்’, அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
இதுபோக, சில தெலுங்கு படங்களும் நாளை முதல் ஓடிடியில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’தாகு மஹாராஜ்’ என்ற தெலுங்கு படம், ஆஹா ஓடிடியில் ’பூதடம் பாஸ்கர் நாராயணா’, மற்றும் ஈடிவி வின் ஓடிடியில் ’சாமேலன்’ என்ற தெலுங்கு படம் வெளியாகின்றன.