பார்வையற்ற காளையை 12 ஆண்டுகளாக சொந்த மகன் போல கவனிக்கும் விவசாயி

3 hours ago
ARTICLE AD BOX

பார்வையற்ற காளையை 12 ஆண்டுகளாக சொந்த மகன் போல கவனிக்கும் விவசாயி

காணொளிக் குறிப்பு, கண் பார்வையற்ற காளையை 12 ஆண்டுகளாக 'மகன்' போல கவனிக்கும் விவசாயி
பார்வையற்ற காளையை 12 ஆண்டுகளாக சொந்த மகன் போல கவனிக்கும் விவசாயி
2 நிமிடங்களுக்கு முன்னர்

இவர் இந்திரசென் மோட்டே. மகாராஷ்டிராவின் சோலாபூரில் உள்ள வாலுஜ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.

இவரது காளை சோன்யா, புற்றுநோயால் பார்வையை இழந்துவிட்டது.

கிராமத்தினர் காளையை விற்றுவிடுமாறு கூறினாலும், இந்திரசென் மறுத்துவிட்டார். அதைத் தாமே பராமரிக்க முடிவெடுத்தார்.

இந்தக் காளை பார்வையை இழந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திரசென் தன் சொந்த மகனைப் போல் அதைக் கவனித்து வருகிறார்.

இந்திரசென் முடிவுக்கு அவருடைய குடும்பத்தினர் பக்கபலமாக நின்றனர். பல ஆண்டுகளாக, அக்காளையின் சிகிச்சைக்காக இந்திரசென் 25,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

கண் பார்வை பறிபோன பின்னரும் சோன்யாவை வயல்களுக்கு அழைத்துச் செல்வதாக இந்திரசென் விமர்சனங்களை எதிர்கொண்டார். அதை விலங்கு வதையாகப் பலரும் பார்க்கின்றனர். ஆனால், அது சிகிச்சையின் ஒரு பகுதி என்கிறார் இந்திரசென்.

சோன்யா தற்போது ஓய்வில் இருந்து வருகிறது. அதை வேலையில் ஈடுபடுத்துவதை இந்திரசென் நிறுத்திவிட்டார். வயதான காலத்தில் அதை ஓய்வெடுக்க வைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article