பார்த்திபன் கனவில் வந்த த.வெ.க தலைவர் விஜய்..கனவில் என்ன பேசி இருக்கிறார்கள் பாருங்க..!

3 days ago
ARTICLE AD BOX
actor parthiban latest twitter post update

கனவில் வந்து விஜய் பேசியுள்ளதாக பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

actor parthiban latest twitter post update
actor parthiban latest twitter post update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என கட்சியின் கொடியும் பெயரையும் அறிவித்து மிகப்பெரிய மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்தி இருந்தார்.

வருகிற 2026 ஆண்டு தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் ஒரு புறம் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தளபதி விஜய் கனவில் வந்து பேசியதாக பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் நேற்று இரவு நேற்றைய நண்பரும் இன்றைய த.வெ.க தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல்.. வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரசிய நிகழ்வுகள். சரியாக பதிவு செய்ய ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே என பார்த்தால் அது கனவு..ஏன் தான் இப்படி ஒரு பகல் கனவு இரவில் வருவதோ ஆனா சத்தியமா வந்தது.. கனவுகள் நாம் நினைவுகளின் நகல்கள் என சொல்லுவார்கள் சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்பந்தமான பதில்கள் என இப்படி சில காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது மட்டுமில்லாமல் பார்த்திபன் தவெ.கவில் இணைவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பார்த்திபனின் இந்த கனவு பற்றிய உங்களுடைய கருத்தை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்… pic.twitter.com/MzV00BS3b7

— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025

The post பார்த்திபன் கனவில் வந்த த.வெ.க தலைவர் விஜய்..கனவில் என்ன பேசி இருக்கிறார்கள் பாருங்க..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article