ARTICLE AD BOX
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பார்சிலோனாவின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம், சவூதி அரேபியாவில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டி நடத்துவதற்காக வகுக்கப்பட்ட வணிக ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில், இன்று (மார்ச் 14) அந்நாட்டு நீதிபதியால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ் தலைமையில் மேற்கொண்ட இந்த ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டி ஒப்பந்தத்தில் ஊழல் மற்றும் பண்மோசடி நடைபெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து நீதிமன்றத் தரப்பில் கூறப்பட்டதில், கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு சவூதி அரேபியவில் கால்பந்து போட்டிகளை நடத்த ஆண்டுக்கு 40 மில்லியல் யூரோ மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது என்று கூறுப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்ததிற்காக பிக்கேவின் காஸ்மோஸ் எனும் பொழுதுபோக்கு விளையாட்டு நிறுவனத்திற்கு மற்றொரு 4 மில்லியன் யூரோ அளவிலான பணம் பங்களிப்பாக (கமிஷனாக) வழங்கப்பட்டது எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!
இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பிக்கே மறுத்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த விசாரணை மனுவின் மூலமாக கோடிக்கணக்கான யூரோஸ் குறித்து ரூபியால்ஸ் மற்றும் பிக்கே பேசும் ஆடியோக்கள் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கடந்த 2024 ஏப்ரலில் ரூபியல்ஸிடன் நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் முற்றிலும் மறுத்து வந்தார். அதன் பின்னர், பிக்கே மீதான விசாரணை துவங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருவதால் இதனை நீதிபது நினைத்தால் தொடர்ந்து விசாரிக்க பரிந்துரைக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியும் எனக் கூறப்படுகின்றது.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் நாட்டு விராங்கனை ஜெனிபர் ஹெர்மோஸோ என்பவரை அவரது அனுமதியின்றி முத்தமிட்டதற்காக லூயிஸ் ரூபியால்ஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளியென கடந்த மாதம் (பிப்ரவரி) தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.