ARTICLE AD BOX
பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரின் இல்ல திருமணம் சேலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கத்துக்கான படிப்பை முடித்துள்ளார். தற்போது, அவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ஜி. கே. மணியின் இல்ல திருமணம் சேலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்வதற்காக சேலம் சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜி. கே. மணியின் மகன், லைக்கா நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருப்பதால், லைக்கா நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கி வரும் ஜேசன் சஞ்சய் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் சேலத்திற்கு சென்ற புகைப்படம் , வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.