ARTICLE AD BOX
பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சங்கிலி மேட் ஓவர் டோனட்ஸ், பேக்கரி பொருள்களுக்கு 18 சதவீத வரி செலுத்துவதற்குப் பதிலாக, தனது வணிகத்தைத் தவறாக வகைப்படுத்தி 5 சதவீத ஜிஎஸ்டி செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ரூ.100 கோடி அபராதத்தை எதிர்கொண்டுள்ளது.
பாப்கார்னுக்கு அடுத்தபடியாக தற்போது டோனட்கள் அதிக ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைக் குறிப்பிட்டு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் அவசியம் என்றும் அவர் கூறினார்.
கடந்தாண்டு டிசம்பரில் ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு மூன்று வெவ்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்த சிக்கல்களை வெளிப்படுத்தியிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், மேலும் ஜிஎஸ்டி 2.0-ஐ மறுசீரமைத்து, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முன்வருமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த ஜி.எஸ்.டி 2.0 சிக்கல்கள் பற்றி காங்கிரஸ் 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது வெளியிட்ட நியாய பத்திரம் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகவும் அதில் எளிய வரி விதிப்பு குறித்துத் தெரிவித்து, அதனை கொண்டு வருவதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.