பாண்ட்யாவை விட அந்த பாக்.ஆல் ரவுண்டர் சிறந்தவர் - முகமது ஹபீஸ்

4 hours ago
ARTICLE AD BOX

துபாய்,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அடுத்த 10 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி. கோப்பையை சொந்தமாக்கியுள்ளது.

இந்த 2 வெற்றிகளிலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கலக்கிய அவர் வெற்றி நாயகனாக ஜொலித்தார். குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் 2-வது வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை விட தங்கள் நாட்டின் அப்துல் ரசாக் சிறந்த ஆல் ரவுண்டர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அப்துல் ரசாக் செயல்பாடுகளின் புள்ளி விவரங்களை நீங்கள் எடுத்து பாருங்கள். அவர் சிறந்த பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தக் கூடியவராக இருந்தார். ஆனால் நிர்வாகம் அவரை சரியாகக் கவனித்து கொள்ளவில்லை. அந்த வீரரும் சரியாக பதில் கொடுக்கவில்லை. ரசாக் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்த வரை அவர் பாண்ட்டியாவின் இந்த வெர்ஷனை விட சிறந்தவர்" என்று கூறினார்.

Read Entire Article