ARTICLE AD BOX
Published : 11 Mar 2025 11:59 PM
Last Updated : 11 Mar 2025 11:59 PM
பாடல் காட்சி ஒத்திகையில் ஹிருத்திக் ரோஷன் காயம்

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் இப்போது ‘வார் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். கியாரா அத்வானி உட்பட பலர் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தொடர்ச்சியாக உருவாகிறது. இந்தப் படத்துக்கான நடனக்காட்சியை மும்பையில் படமாக்க இருந்தனர். ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் என்.டி.ஆரும் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹிருத்திக் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் 4 வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை