‘பாடகி கல்பனா தற்கொலைக்கு முயலவில்லை’ - தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆனதாக மகள் விளக்கம்

10 hours ago
ARTICLE AD BOX

Published : 05 Mar 2025 07:43 PM
Last Updated : 05 Mar 2025 07:43 PM

‘பாடகி கல்பனா தற்கொலைக்கு முயலவில்லை’ - தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆனதாக மகள் விளக்கம்

பாடகி கல்பனா | கோப்புப்படம்
<?php // } ?>

ஹைதராபாத்: "எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவர் எடுத்துக்கொண்ட தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. தயவுசெய்து தவறான தகவலைப் பரப்பி விஷயத்தை பெரிதுபடுத்தாதீர்கள்" என்று பிரபல பின்னணி பாடகி கல்பனாவின் மகள் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கும் அவரின் மூத்த மகளுக்கும் பிரச்சினை என்றும், கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக கல்பனாவின் தற்கொலை முயற்சித்தாக கூறப்படுவதை அவரது மகள் மறுத்துள்ளார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்பனாவின் மகள் கூறுகையில், "எனது தாய்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார். அவர் ஒரு பாடகி. மேலும் முனைவர் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் எல்எல்பி படித்துவருகிறார். இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. இதனால், மருத்துவரின் பரிந்துரையின் படி, அவர் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டுவந்தார். மன அழுத்தம் காரணமாக அவர் சாப்பிட்ட மாத்திரையின் அளவு அதிகமாகிவிட்டது. தயவு செய்து தவறான தகவல்களை உருவாக்க வேண்டாம்.

எனது பெற்றோர் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். எனது குடும்பத்தில் அனைவரும் நலமாக உள்ளோம். அம்மா விரைவில் குணமாகி திரும்பி வருவார். இது தற்கொலை முயற்சி அல்ல. அவர் எடுத்துக்கொண்டு தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. எனவே, தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்தார்.

பிரபல பாடகியான கல்பனா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, செவ்வாய்க்கிழமை இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். கல்பனாவின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் கல்பனாவின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்தபோது அவரது கணவர் சென்னையில் இருந்துள்ளார். மனைவியின் நிலைகுறித்து கேள்விப்பட்டவுடன் அவர் ஹைதராபாத் விரைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article